772 total views, 1 views today
Eye talkies என்ற பட நிறுவனம் சார்பாக சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கும் படத்திற்கு ” 143″ என்று பெயரிட்டுள்ளார்..
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I LOVE YOU என்கிற வார்த்தைகளின் சுருக்கமே 143 ..
இந்த டைட்டில் இது வரை இன்றைய தலைமுறை இயக்குனர்களால் கண்டு கொள்ளப் படாமல் விட்டிருப்பது ஆச்சர்யம் தான். அதை பிடித்துக் கொண்டார் இயக்குனர் ரிஷி.
அவரே கதானாயகனாகவும் நடித்து எழுதி இயக்குகிறார்.
நாயகிகளாக பிரியங்கா ஷர்மா நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள்..
அனுபவ நடிகரான விஜயகுமார் பக்குவபட்ட கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள்..
மற்றும் சுதா ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன் நெல்லைசிவா மோனா முண்டாசுப்பட்டி பசுபதி இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார்.
ஒளிப்பதிவு. : ராஜேஷ் ஜே.கே
இசை. : விஜய் பாஸ்கர்
பாடல்கள். : கபிலன் வைரமுத்து அறிவுமதி, சினேகன் கபிலன்
கலை. : மணிமொழியன்
ஸ்டண்ட். : தீப்பொறி நித்யா
எடிட்டிங். : சுரேஷ் அர்ஸ்
தயாரிப்பு மேற்பார்வை : பிரபாகரன்
தயாரிப்பு. : சதீஷ் சந்திரா பாலேட்
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ரிஷி.
படத்தைப் பற்றி இயக்குனர் ரிஷிஎன்ன சொல்கிறார்? அவரிடமே கேட்டோம்…
அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக்(ரிஷி)
பெளர்னமி அன்று பிறந்த நாயகி மது(பிரியங்கா ஷர்மா)இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன்(ராஜசிம்மன்).
இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதையாக்கம்.
படம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்.
படப்பிடிப்பு ஹைதராபாத் சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.
என்றார் இயக்குனரும் நடிகருமான ரிஷி.