தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், அடையாளம் காணப்படாத திறமையான மாணவர்களையும், அங்கே பணிபுரியும் திறமை வாய்ந்த ஆசிரியர்களையும் கண்டறிந்து அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக ‘You Are Loved’ என்கிற தன்னார்வ தொண்டு அமைப்பு வருடந்தோறும் புரட்சியாளர்கள் விருது வழங்கி வருகிறது.
இந்த விருது வழங்கும் விழா நேற்று ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகரும் சமூக ஆர்வலருமான அபிசரவணன் மேலும் பலர் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பேசினார்.
முதன்முறையாக மாணவர்களை மேடையேற்றி புரட்சியாளர்கள் விருது வழங்கப்படுவது புதுமையான விஷய என்றும் படிக்கிற காலத்திலேயே மாணவர்களுக்கு இப்படி ஒரு உத்வேகம் கிடைப்பது அபூர்வமான ஒன்று என்றும். இதுபோன்று மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சிகள் நிறைய நடத்தப்பட வேண்டும் ” என்றும் கேட்டுக்கொண்டனர்.
More Details Please Contact: 9840934257 – Daniel