பூசை போட்டாலே விஜய்சேதுபதி படம் விற்பனையாகிவிடும்

0

 833 total views,  1 views today

மக்கள் செல்வன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி கொடுக்க முன்வந்தபோது அதை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, உண்மையில் தான் மக்கள் செல்வன்தான் என்பதை நிரூபித்து வருகிறார்.
சமீபத்திய படம் ஒன்றில் காளையை விஜய் சேதுபதி அடக்குவது போன்ற காட்சிகள் இடம் பிடித்திருந்தன. நீங்கள் உண்மையாகவே காளையை அடக்கினீர்களா என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அண்ணே அதெல்லாம் கிராபிக்ஸ்தான் என்று உண்மையைப் போட்டு உடைத்தவர்தான் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி நடித்த முந்தைய படங்களின் வெற்றி அவரை எங்கே கொண்டு சேர்த்திருக்கிறது தெரியுமா….
பூசை போட்டாலே விஜய்சேதுபதி படம் எல்லா ஏரியாக்களும் விற்பனையாகிவிடும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.
ஆம்…
‘விக்ரம் வேதா ’விற்கு பிறகு ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மார்கெட் வேல்யூ அதிகரித்திருப்பதாக திரையுலகினர் கருதினர். இதனை மெய்பிக்கும் வகையில் அவரின் நடிப்பில் தயாராகும் ‘ஜுங்கா ’ படத்தினை படபிடிப்பு செல்லும் முன்பே ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற பட வெளியீட்டு நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இது குறித்து படக்குழுவினர் பேசும் போது,‘விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் மாஸ் எண்டர்டெயினர் படமான ‘ஜுங்கா ’வின் முதற்கட்ட படபிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வியாபாரம் முடிவடைந்திருக்கிறது. ஏ & பி குரூப்ஸ் (A & P Groups) என்ற நிறுவனத்தார் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார்கள். இது விஜய் சேதுபதியின் திரையுலக வளர்ச்சிக்கு நல்லதொரு அடையாளம் ’ என்றனர்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் நடிக்கிறார். கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கோகுல். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ’ என்ற வெற்றிப்படத்தில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.