Tuesday, December 10

பூர்ணா நடிக்கும் பிரமாண்ட பேய் படம் “ குந்தி “

Loading

 

அன்னை  திரைக்களம் சார்பில்  மே.கோ.உலகேசு குமார், 

மேடூர் பா.விஜயராகவன்சா.பா.கார்த்திராம் இணைந்து 

தயாரிக்க SFF  TV   வழங்கும் படம் “ குந்தி “

இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த அபிமன்யூ சிங் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பேபி தன்வி, பேபி கிருத்திகா இருவரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பலர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு –        கர்ணா

இசை           –        யஜமன்யா

எடிட்டிங்     –        SFF TV காளிராஜ், சந்திரபிரகாஷ்

பாடல்கள்    –        வலங்கைமான், நூர்தின், முருகானந்தம், வள்ளுவர்தேவன்

இணை தயாரிப்பு      –       மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம்

இயக்கம்           –       பண்ணா ராயல்

வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு  –  A.R.K.ராஜராஜா

தயாரிப்பு  –  மே.கோ.உலகேசுகுமார்

படம் பற்றி A.R.K.ராஜராஜா கூறியதாவது..

தெலுங்கில் ராட்ஷஷி என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்ட இந்த படமே தமிழில் “ குந்தி “ என்ற பெயரில் தயாரித்து வருகிறோம்.

தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் பூர்ணாவின் வாழ்வில் திடீரென ஒரு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கிறது. ஒரு பேய் தனது குழந்தைகளை கொள் துடித்துக்கொண்டிருக்க அந்த பேயிடமிருந்து எப்படி குழந்தைகளை காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

அருந்ததி, சந்திரமுகி, முனி, காஞ்சனா போன்ற படங்களை மிஞ்சும், தமிழ் சினிமாவின் அடுத்த பிரமாண்டமான பேய் படமாக இந்த குந்தி இருப்பாள்.

முப்பது நிமிடம் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பாகவும், திகிலாகவும் இருக்கும். இதுவரை பேய் படங்களில் நடித்த பிரபலங்களை மிஞ்சும் அளவிற்கு இந்த படத்தில் பூர்ணா தனது நடிப்பு திறமையை வெளிபடுத்தி இருக்கிறார். இந்த படம் அவரது திரையுலக வாழ்கையில் ஒரு மயில்கல் என்பதில் எந்த ஐயமும் இல்லை. விரைவில் அனைவரையும் பயத்தில் உறைய வைக்க வருகிறாள் இந்த “ குந்தி “ என்றார் A.R.K.ராஜராஜா.