தென் இந்தியாவில் சிறந்ததொரு குறும்படங்களை தயாரிக்கும் நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’, தொடர்ந்து எண்ணற்ற திறமை வாய்ந்த இளம் இயக்குநர்களையும், அவர்களது படைப்புகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வண்ணம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இவர்களின் அடுத்த படைப்பு, ஜெகதீஷ் பாண்டியன் இயக்கி இருக்கும் ‘எஸ்கேப்’ குறும்படம்.
13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ‘எஸ்கேப்’ குறும்படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருப்பது மட்டுமில்லாமல், எந்த ஒரு வசனமுமின்றி உருவாக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. டிமோத்தி பக்மேனின் இசை மற்றும் சேத் பாண்டியனின் ஒளிப்பதிவு இந்த ‘எஸ்கேப்’ படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை வெகுவாக சொல்லலாம். “சிலருடைய வாழ்க்கையின் மிக முக்கியமான தருணங்களில், நம்முடைய பங்கும் பெரிதாக இருக்க கூடும். அவர்கள் யார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட…” இது தான் இந்த ‘எஸ்கேப்’ குறும்படத்தின் ஒரு வரி கதை.