‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு – ‘முரண்’

0

 886 total views,  1 views today

1(2)
தரமான குறும்படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’  நிறுவனம் தற்போது  ‘முரண்’ குறும்படம் மூலம் மேலும்  ஒரு இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  அவர் தான் இயக்குநர் ஆதித்யா நாராயணன். காதல் தோல்வியை எண்ணி வருந்தி கொண்டிருக்கும் ஒரு பெண், தாங்கள் படும் கஷ்டத்தை வெளிநாட்டில் இருக்கும் தங்களின் மகனுக்கு தெரியப்படுத்த கூடாது என்று கருதும் பெற்றோர், காதல் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை நோக்கி பயணம் செய்யும் ஒரு பெண்,  தான் எவ்வளவு  கஷ்டப்பட்டாலும் சரி தன்னுடைய தாய் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணும்  மகள். இவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையிலும் எடுக்கப்படும் வேறுபட்ட  முடிவுகள் தான் இந்த ‘முரண்’.
பெரும்பாலான மக்கள் தங்களின்  வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முடிவுகளை, இரண்டு முக்கியமான  தருணங்களை மனதில் கொண்டு தான் எடுக்கிறார்கள். ஒன்று, தன்னை மட்டுமே  பற்றிய சிந்தனையில் எடுக்கப்படும் முடிவு, மற்றொன்று தன்னை சார்ந்து இருக்கும் மக்களை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு. இது தான் ‘முரண்’ குறும்படத்தின் ஒரு வரி கதை.
Share.

Comments are closed.