திறமையான இளம் கலைஞர்களை கண்டறிந்து, அவர்களின் படைப்புக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை செம்மையாக செய்து கொண்டிருக்கிறது, தென் இந்தியாவில் முன்னணி குறும்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி கொண்டிருக்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ . இவர்களின் அடுத்த படைப்பு இயக்குநர் ஷரத் கே பாஸ்கரன் இயக்கி இருக்கும் ‘க்ரே’.
தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகின்றான் ஒரு இளைஞன். அவனை விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி கொண்டு கிளம்புகின்றான் அவன் சகோதரன். இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், தன்னுடைய தொழில் பங்குதாரரை சந்திக்க காரை நிறுத்திகிறான் அந்த சகோதரன். அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த ‘க்ரே’.எல்லா நல்ல விஷயத்தில் கெட்டதும் இருக்கும், எல்லா கெட்ட விஷயங்களில் நல்லதும் இருக்கும் என்பது தான் இந்த ‘க்ரே’ படத்தின் ஒரு வரி கதை.