https://www.youtube.com/watch?v=emFyvFTxWeA&feature=youtu.be
வலுவான கருத்துக்களை தங்களின் தரமான குறும்படங்கள் மூலம் மக்களின் உள்ளங்களில் விதைத்து வரும் பெஞ்ச் பிலிக்ஸ் நிறுவனத்தின் புகழ், நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகின்றது. சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு திறமையான படைப்பாளிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி கொண்டிருக்கிறது பெஞ்ச் பிலிக்ஸ் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர்கள் சுந்தர் மற்றும் ஜி பி ஆர் கோபி இயக்கி இருக்கும் ‘திசையறியார்’ குறும்படம்.
வெளிநாட்டு வேலை என்றாலே சொகுசு வாழ்க்கை தான் என்று பலரும் எண்ணி வருகின்றனர். துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சொந்த நாட்டை விட்டு பணத்திற்காக பலர் உலகம் முழுதும் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களின் உண்மை நிலவரம் என்ன என்பதை மனதை தொடும் வகையில் உணர்த்தி இருக்கின்றது இந்த 8 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘திசையறியார்’ குறும்படம்.