பெரும் வரவேற்பை பெற்ற ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.

0

Loading

சமீபத்தில் ரிலீசான இப்படத்தின் டீஸர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வித்யாசமான கதையும், அது சொல்லப்பட்ட  விதமும் , நடிகர்களின் அற்புதமான நடிப்புமே இந்த பெரிய வரவேற்புக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. தரமான படங்களை வாங்கி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யும் ‘Clap Board Productions’ ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் தமிழக  திரையரங்க உரிமையை பெற்றுள்ளது. ஒரு ரசிகனின் பாராட்டு claps மூலமே வெளிப்படும். அந்த claps,  படம் வாங்கும் நிறுவனத்தின் பெயரிலே இருப்பது குறிப்பிடத்தக்கத்து.  இப்படத்தை 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விஜய் சேதிபதியின் புகழ் , கவுதம் கார்த்திக்கின் ஆற்றல் மற்றும் இயக்குனர் ஆறுமுக குமாரின் திறன் இப்படத்தை சிறப்பாகியுள்ளது எனக்கூறப்படுகிறது.

” எங்களுக்கு இந்த வளர்ச்சி சந்தோஷமளிக்கிறது . 2018 ஆம் ஆண்டை தமிழ் சினிமா ரசிகர்கள் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தோடு இனிதே தொடங்கலாம் . இப்படம் நிறையபேரின் நல்லாசிகளை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என இப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார்.

Share.

Comments are closed.