பணத்தை வைத்து பெரும் பின்புலத்துடன் பணம் சோ்த்துக்கொண்டிருக்கும் அதிகாரவர்க்கத்திடம் தங்களின் ஒட்டுமொத்த வாழ்கையையும் ஒப்படைத்துவிட்டு,அவர்களிடமிருந் து அன்பையும் நம்பிக்கையையும் எதிர்பார்த்து காத்திருக்கும் எளிய மனிதர்களை பற்றிய கதையே பொது நலன் கருதி.
” இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துகொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகாரவர்க்கத்தின் சுயநலன்தான்,காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது,பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக்கொண்டு, அதன் பின்பு அவர்களை எளிய மனிதர்கள் தங்களின் கோபத்தால் எதுவுமே செய்ய முடியாதபடி கட்டமைத்துக்கொண்டு எப்படி செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கிகொள்கிறார் என்பதினை திரைக்கதையின் மூலமாக எவ்விதமான சமரசத்திற்கும் இடமளிக்காது மக்களுக்கு உண்மையை காட்சிப்படுத்துவதுவே இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும் ” என்றார் இப்பட இயக்குனர் சீயோன்
இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,சந்தோஷ்,ஆதித்அருண்,யோ க்ஜாப்பி,அனுசித்தாரா,சுபிக் ஷா,லிஸா,இமான் அண்ணாச்சி,வழக்கு எண் முத்துராம்,சுப்ரமணியபுரம் ராஐா மேலும் பலர் நடித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் இயக்கம்
சீயோன்.