855 total views, 1 views today
‘ப்ரேமம்’ படத்தில் நண்பர்களாகவே வாழ்ந்த நிவின் பாலியும் அல்தாப் சலீமும் இணைந்து நடித்துள்ள ‘ஜண்டுகளூடே நட்டில் ஓரிடவேளா’ இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. வரும் ஓணம் திருநாளானன்று வெளி ஆகி ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது. கேரளாவை தாண்டியும் ரசிக்கப்பட்டு கொண்டாடப்படும் நிவின் பாலியே இப்படத்தை தயாரித்துள்ளார்.பெரும் வெற்றி பெற்ற ‘ஆக்ஷன் பிஜு’ படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தின் டீசரும், ‘எந்தாவூ’ பாடலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புது முக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். முன்னாள் பிரபல நடிகை ஷாந்தி கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் நடிப்பில் மீண்டும் பலவருடங்கள் கழித்து களமிறங்கியுள்ளார் . இவரின் வருகையாலும் ‘ப்ரேமம்’ நடிகர்களின் கூட்டணியாலும் இந்த ஜனரஞ்சகமான குடும்பப்படம் அனைவராலும் ரசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1 அன்று உலகெங்கும் வெளி வர உள்ள இப்படம் மிகவும் எதிர்பார்க்க படும் படம் ஆகும்.