‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியின் மக்கள் பணி

0

Loading

‘கஜா’வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பிலான உடனடி நிவாரணப் பொருட்கள் – ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி அறிவிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்ச ரூபாய் மதிப்பில், உடனடியாக தேவைப்படும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வழங்குகிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில்,”கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வசதி முழுமையாக திரும்பவதற்கு பத்து தினங்கள் ஆகும் என்பதால், அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் சார்ஜிங் டார்ச்லைட் ஆயிரக்கணக்கில் வழங்கப்படும். லட்சக்கணக்கான மரங்கள் அழிந்து நாசமாகிவிட்டதால், அதற்கு முன்னுரிமைக் கொடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் தோப்புகளை முழுவதுமாக புனரமைத்து தரப்படும். அவர்கள் தங்களின் பிள்ளைகள் போல் வளர்த்து வந்த தென்னை, பலா போன்ற மரங்களின் கன்றுகளை, மீண்டும் அவ்விடத்தில் புதிதாக நட்டு வைக்கப்படும். இதற்கான களப்பணிகளில் என்னுடைய ரசிகர்களும் ஈடுபடுவார்கள். நிவாரண நிதி தேவைப்படுபவர்களை ரசிகர் மன்றத்தின் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும்.“ என்றார்.
இதனிடையே கஜா புயல் மற்றும் கனமழையின் காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி, அந்த குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யவிருப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.