மக்கள் தொடர்பாளர் மெளனம் ரவியின் மனம் கவர்ந்த படம்

0

 297 total views,  1 views today

தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் வழங்கும் தகவல்களைத்தான் பொதுவாக திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்புவார்கள். சமீபத்தில் திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் மெளனம் ரவியிடமிருந்து வந்த மின்னஞ்சல் சற்று வித்தியாசமாக இருந்தது.
எம்.ஆர்.பாரதி இயக்கிய அழியாத கோலங்கள் 2 என்ற படத்தைப் பார்த்துவிட்டு, தனது கருத்தை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார்.
அதைப் படித்ததும் அழியாத கோலங்கள் 2 படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது.
மெளனம் ரவியிடமிருந்து வந்த மின்னஞ்சல் இதோ உங்கள் பார்வைக்கு…

காதலையும் நட்பையும் கெளரவப் படுத்தும் அழியாத கோலங்கள் 2

திரையலகை கெளரவப் படுத்த அந்தந்த கால கட்டங்களில் ஒவ்வொரு படமாக வரிசை கட்டி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறது..

நெஞ்சில் ஒரு ஆலயம் அலைகள் ஓய்வதில்லை காதல் கோட்டை புதுவசந்தம் நட்புக்காக 96 என்று காதலுக்கும் நட்புக்கும் மகுடம் சூட்டிய பல படங்கள் உண்டு…இந்த வரிசையில் உள்ள படங்களை பட்டியலிட்டால் வெகு நீளமாகும்..
சமீபத்தில் அழியாத கோலங்கள் 2 படத்தின் சிறப்பு காட்சிக்காக அழைக்கப் பட்டேன்..

நாற்பதை கடந்தவர்கள் மட்டுமே திரையில் தெரிவார்கள்..அவர்களை வைத்து எந்த மாதிரியான வித்தியாசத்தை காதலில் காட்டி விட முடியும் என்கிற அலட்சியத்துடன் தான் உட்கார்ந்தேன்…

டைட்டில் ஓட ஆரம்பித்ததும் திரையில் மின்னிய பெயர்களில் கை தட்ட எந்த பெயருமே இல்லை…
இசையமைப்பாளர் காமிராமேன் இயக்குனர் யாருமே பெரிய ஆட்கள் இல்லை…
 படம் ஆரம்பித்தது…
அர்ச்சனா தெரிந்தார்..
அவார்ட் படம் மாதியான ஒரு தோற்றம் தெரிந்தது…

மெதுவாக ஆரம்பித்த படம் …
நட்பையும் காதலையும் இதை விட புனித படுத்தி விட முடியாது என்கிற மாதிரியான ஒரு அழுத்தத்தை மனசுக்குள் ஏற்படுத்தியது…

பிரகாஷ்ராஜ் வந்தார்..
நடித்தார் ..என்று சொல்ல முடியாது…
எழுத்தாளர் கதாபாத்தரத்தில் வாழ்ந்து விட்டார்..

போலீஸ் வேடத்தில் நாசர்…காக்கி சட்டையின் கடுமையையும், உள்ளத்தின் ஈரத்தையும் பிரதிபலித்து விட்டார்…

ஒரு பெண்ணின் பெருமையையும் பொறுமையையும் இவரை விட யாரால் பிரதிபலிக்க முடியும் என்கிற ரேவதி கதாபாத்திரம்…

இப்படி நான்கு கதாபாத்திரங்களை மட்டும் வைத்து திரையின் நான்கு பக்கங்களையும் கெளரவப் படுத்தி இருக்கிறார் இயக்குனர் M.R.பாரதி…

அடிதடி இல்லை…குத்து பாட்டு இல்லை…காமெடி இல்லை…
டுயட் இல்லை…

இதெல்லாம் தான் கமர்ஷியல் பார்முலா என்றால்…

இது எதுவும் இல்லாமல் இரண்டு மணி நேரம் திரையை நோக்கியே நம் கண்கள் என்றால் அதிசயம் தானே…

அந்த அதிசயத்தை அழியாத கோலங்கள்2 நிகழ்த்தி இருக்கிறது…

கொண்டாட வேண்டிய படமே..இது

அர்ச்சனா ரேவதி பிரகாஷ்ராஜ் நாசர் இயக்குனர் M.R.பாரதி ஆகியோர் விருதுகளுக்கு தயாராக இருக்கட்டும்…

வாழ்த்துக்களுடன்

மெளனம் ரவி

Share.

Comments are closed.