225 total views, 1 views today
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் தேசம் பத்திரிகையின் மாபெரும் சாதனையாளர்கள் விருது விழா ‘பிளஸ் ஆர் மைனஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவோடு மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த விருது விழாவில் பல்வேறு துறையைச் சார்ந்த மொத்தம் 60 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இந்த தேசம் சாதனையாளர் விருது விழாவில் தேசம் பத்துரிகை – தேசம் வலைத்தள ஊடகத்தின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இந்த விருது விழாவில் ‘பிக் பாஸ்’ புகழ் பரணிக்கு ‘மலேசிய மக்கள் நாயகன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை பரணியின் ரசிகர்கள் அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
நடிகர் அபி சரவணன் அவர்களுக்கு ‘மண்ணின் மைந்தன்’, ‘2017 முன்னுதாரண இளைஞர்’ ஆகிய இரு விருதுகள் அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் வழங்கப்பட்டது .
மதுரை தொழிலதிபர் செந்தில் குமரன் ‘பசுமை நாயகன்’ விருதையும், சென்னை தொழிலதிபர் மன்சூர் அலிகான் ‘மக்கள் சேவகர்’ விருதையும் அமைச்சர் டத்தோ சரவணனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இந்த விருது விழாவில் மலேசியர்கள் பலர் ஊடகத் துறை, வர்த்தகத் துறை, விளையாட்டு என்று பலதுறைகளில் இருந்து சாதனையாளர் விருதை பெற்றுக் கொண்டனர்.
இந்த தேசம் சாதனையாளர்கள் விருது விழாவில் மஇகா தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ். சுப்பிரமணியம், இளைஞர், விளையாட்டு துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், ம இ கா உதவித் தலைவர் டத்தோ டி.மோமன், போலீஸ் அதிகாரி டத்தோ பரமசிவம், மற்றொரு போலீஸ் அதிகாரி டத்தோ குமரன், இந்தியர் முஸ்லிம் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சைட் இப்ராஹிம், மனிதநேய மாமணி தொழிலதிபர் ரத்னவள்ளி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மலேசியத் தமிழ்ப்பத்திரிகை வரலாற்றில் தேசம் பத்திரிகை – தேசம் வலைத்தள ஊடகம் முதல் முறையாக நடத்திய விருது விழா மலேசிய சாதனையாளர்களுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் என்று தேசம் பத்திரிகையின் தோற்றுநர், தலைமை ஆசிரியர் குணாளன் மணியம் நம்பிக்கை தெரிவித்தார்.