‘மரகத நாணயம்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்

0

Loading

 WhatsApp Image 2017-03-10 at 15.54.59
ஆதி – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படத்திற்கு, ‘U’ சான்றிதழை அளித்துள்ளது தணிக்கை குழு.
‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் ஜி  டில்லி பாபு தயாரித்து, அறிமுக இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இயக்கி இருக்கும் இந்த ‘மரகத நாணயம்’ திரைப்படத்தில்  ஆனந்தராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ், பிரம்மானந்தம், எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சாகசம், கற்பனை மற்றும் நகைச்சுவை போன்ற சிறப்பம்சங்களின் கலவையில் இந்த படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“U  சான்றிதழை பெறுவது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நிச்சயமாக ஒரு கனவாக இருக்கும். அந்த வகையில் ‘மரகத நாணயம்’ படத்திற்கு  தணிக்கை  குழுவினர் U சான்றிதழை வழங்கி இருப்பது, எங்கள் ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. தரமான படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். ஒரு படத்தின் தரத்தை உயர்த்துவது U சான்றிதழ் தான். அந்த U சான்றிதழை பெற்று இருக்கும் எங்கள் ‘மரகத நாணயம்’,  நிச்சயமாக ரசிகர்களின் உள்ளங்களை கவரும்” என்று உற்சாகமாக கூறுகிறார் தயாரிப்பாளரும், ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ நிறுவனத்தின் நிறுவனருமான டில்லி பாபு.
Share.

Comments are closed.