மலேசியாவில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா

0

Loading

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , ‘7 C’s Entertainment Private Limited’ மற்றும் ‘Amme Narayana Entertainment’ ஆகிய  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இப்படத்தின் தயரிப்பாளர்கள் இதுவரை யாரும் செய்திராத ஒரு புதிய, மாபெரும் விளம்பர யுக்தியை கையாளவுள்ளனர். வரும் ஜனவரி 6 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர கிரிக்கெட் விழாவில் பங்கேற்கவுள்ள அணிகளில் ஒன்றான ‘Ramnad Rhinos’ அணியை இவர்கள் வாங்கியுள்ளனர்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்குவது இதுவே முதல் முறை. இந்த ‘Ramnad Rhinos’ அணியின் கேப்டன்  விஜய் சேதுபதி ஆவார். இந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவில்தான் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா,மாபெரும் நட்சத்திர பட்டாளம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என்பது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.  

இந்த படத்தில் காயத்ரி மற்றும் நிஹாரிகா கோனிடேலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜஸ்டின் பிரபாகரன் இசையில், கோவிந்தராஜின் படத்தொகுப்பில் இப்படம்  உருவாகியுள்ளது.

Share.

Comments are closed.