832 total views, 1 views today
இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் “ ஒரு கனவு போல “ இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார்.
விஜயசங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.
முதல் முறையாக படத்தின் பாடல்களை பென்டிரைவில் வெளிட்டுள்ளனர். விழாவில் நடிகர் சார்லி, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், நடிகர் அசோக் இயக்குனர் பேரரசு, நடிகை ரோகிணி, எஸ்.ஆர்.பிரபாகரன், பொன்ராம் , கார்த்திக் சுப்புராஜ், பெப்ஸி தலைவர், பெப்ஸி சண்முகம், ஆர்.கே.செல்வமணி, கவிஞர் முத்துலிங்கம், ஒளிப்பதிவாளர் சுகுமார் மற்றும் ஒரு கனவு போல படக்குழு ஆகியோர் கலந்து கொண்டனர்.