முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்க எனக்கும் ஆசை தான் – “மதுரவீரன்” சண்முகபாண்டியன்

0

Loading

மதுரவீரன் படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின் பெர்சனல் வாழ்கையில் உள்ள பிரச்சனை நோக்கி நகர தொடங்கும் அதிலிருந்து ஹீரோ வில்லன் சண்டை காட்சிகள் நோக்கி சென்றுவிடும். படம் முழுவதும் ஜல்லிக்கட்டு பற்றி இருக்காது. ஆனால் மதுரவீரன் படத்தின் தொடக்கம் முதல் இறுதி காட்சி வரை ஜல்லிக்கட்டு பற்றிய கதை இருக்கும். படத்தில் பாடல்கள், சண்டைகாட்சிகள், நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும் ஜல்லிக்கட்டை விட்டு கதை வெளியே செல்லாது. இளைஞர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மெரீனாவில் நடைபெற்ற போராட்டம் மூலம் நன்றாக தெரிந்துள்ளது. ஆனால் மதுரவீரன் படத்தின் மூலமாக இன்னும் அதிகமான விஷயங்களை கொண்டுசேர்க்க முடியும் என்பதால் தான் இப்படம் உருவானது. நான் நகரத்தில் வளர்ந்தாலும் நிறைய பயணம் மேற்கொள்வேன். சின்ன வயது முதல் அப்பாவுடன் மதுரை சென்றுள்ளேன். அம்மாவின் ஊருக்கு சென்றுள்ளேன். நிறைய கிராமங்களுக்கு சென்றுள்ளேன் அதனால் எனக்கு எந்தவொரு வித்யாசமும் தெரியவில்லை. கிராமத்தில் நிறைய விவசாய நிலங்கள் இருக்கும் நகரத்தில் அனைத்தும் கட்டிடங்களாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் மதுரையில் நடிக்கும் போது எனக்கு வெளி ஊரில் நடிப்பது போன்ற உணர்வில்லை. மதுரை என்னுடைய் சொந்த ஊர் எனக்கு மிகவும் சந்தோஷமாக தான் இருந்தது. படத்தில் மதுரையில் பேசப்படும் தமிழ் பாஷையை கொஞ்சம் பேசியுள்ளேன். படத்தில் மெரீனாவில் நடைபெற்ற போராட்டத்தை மையமாக கொள்ளாமல் போராட்டத்திற்கு காரணம் கிராமத்தில் தான் பிரச்சனை வருகின்றது அதனால் தான் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை அதற்கு தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்று போராட்டம் தோன்றியது. கிராமத்தில் ஏற்பட்ட பிரச்சனை என்ன ஏதற்காக ஜல்லிக்கட்டு நடக்க தடை ஏற்பட்டது என்பதை பற்றிய படம் தான் மதுரவீரன். என்னை பொறுத்தவரை படத்தின் கதையை மட்டுமே தான் பார்பேன். கதை மிகவும் உறுதியாக இருக்கும்பட்சத்தில் நடிக்க ஒப்புகொள்வேன். P.G. முத்தையா அவர்களின் கதை மிகவும் உறுதியானது. அவர் கூறிய கதையை சிறப்பாக படமாக்கியுள்ளர். இப்படத்தின் கதைக்கு பொருத்தமாக மீனாட்சி இருந்தார்.மீனாட்சியின் நடிப்பை நன்றாக வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் P.G. முத்தையா. மீனாட்சி நன்றாக தமிழ் தெரிந்தவர் முதல் படமாக இருந்தாலும் நன்றாக நடித்தார். ஓரு சில இடங்களில் தடுமாறும் போது முத்தையா உதவி செய்வார். கதைக்கு பெரிய நடிகை தேவைப்படும் போது நடிக்க வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன். எல்லாருக்கும் பெரிய இயக்குனருடன், பெரிய நடிகையுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் எனக்கும் அந்த ஆசை உள்ளது. படத்தில் சமுத்திரகனி அவர்களுடன் நடித்த அனுபவம் மிக சிறந்த அனுபவம். சின்ன வயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும் என்பதால் என்னை அவர் அண்ணன் பையன் போல பார்த்துக்கொண்டார். படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் எனக்கு உதவியாக இருந்தனர். அனைவரும் முத்த கலைஞர்கள் நான் சில இடங்களில் தடுமாறும் போது பெரும் உதவியாக இருந்தனர். தேனப்பன் அவர்கள் மாரிமுத்து அவர்கள் வேலராமமூர்த்தி அவர்கள் மைம் கோபி அண்ணன் என அனைவரும் உதவியாக இருந்தனர். படத்தில் என்னுடன் 5 பசங்கள் நடித்துள்ளார்கள் என்னுடைய நண்பர்களாக உண்மையிலும் எனக்கு நண்பர்களாகிவிட்டனர். சித்து , குணா , அருண்மொழி , ராஜபாண்டி , நரைன் இவர்களுடன் இருக்கும் போது படப்பிடிப்பு தளம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் பாலா , கதிர் நாங்கள் என 7 பேர் இணையும் போது படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும்.மதுரவீரன் படபிடிப்பு நடத்தப்பட்ட ஊர்களில் அனைவரும் எல்லா உதவிகளை செய்தனர். தொடந்து இந்த மாதிரியான சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பேன் என்று கூறினார் மதுரவீரன் படத்தின் நாயகன் சண்முகபாண்டியன்.
 
Share.

Comments are closed.