முருகன் மந்திரம் எழுதிய சென்னை புகழ் பாடும் பாடல்!

0

 333 total views,  1 views today


ஜெயதேவ் இயக்கத்தில் கலையரசன், சாயாசிங், அனஸ்வராகுமார் உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டினப்பாக்கம் திரைப்படத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னை புகழ் பாடும் ஒரு பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். அதுபற்றி முருகன் மந்திரம் கூறியதாவது,

நாம் பிறந்த ஊர், வாழும் ஊர்களின் பெருமையையும் புகழையும் நம்முடைய கலைகளின் வழியே பதிவு செய்யக்கிடைக்கும் வாய்ப்பு கொண்டாட்டமானது. பட்டினப்பாக்கம் படத்தில் எழுத வாய்ப்புகிடைத்த “சென்னை எங்க ஊரு” பாடல் எனக்கு அப்படி ஒரு கொண்டாட்டமான உணர்வையே தந்தது. பாடலின் வரிகள் அத்தனையும் எனக்குப்பிடிக்கும். வரிகளுக்கு ஏற்றார்போலவே சென்னையை, சென்னையின் பல பகுதிகளை பாடலில் காட்சிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே படத்தில் “அன்பே எந்தன் தனிமை தின்று போ போ” என்றொரு துள்ளல் காதல் பாடலும் எழுதி இருக்கிறேன். அந்த பாடல் வரிகளும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இன்றைய யுவன்களுக்கும் யுவதிகளுக்கும் ரொம்பவே பிடிக்கும் அந்தப்பாடல். பாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த இசையமைப்பாளர் இஷானுக்கும் இயக்குநர் ஜெயதேவ்க்கும் நன்றியும் வாழ்த்துகளும், என தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

பாடல் வரிகள்:

படம்: பட்டினப்பாக்கம்
பாடல்: சென்னை எங்க ஊரு
இசை: இஷான் தேவ்
பாடல்: முருகன் மந்திரம்

பல்லவி:

சென்னை எங்க ஊரு எங்க ஊரு – சிங்காரச்
சென்னை எங்க ஊரு எங்க ஊரு
இது நம்ம ஊரு நம்ம ஊரு
வந்து பாரு வந்து பாரு
வாழ வைக்கும் நல்ல ஊரே

சரணம் 1:

வெள்ளக்காரன் கட்டிவச்ச கட்டிவச்ச
கோட்டை உண்டு
கோட்டைச்சுவர் தொட்டுத் தொட்டு
ஓடுகின்ற கூவம் உண்டு
எக்கச்சக்க மொழிகளைப்
பேசுகிற மக்கள் உண்டு
ஏகப்பட்ட கடவுளும்
சாமிகளும் இங்க உண்டு

வங்கக்கடல் கரையில
எம்.ஜி.ஆரு தூங்குறாரு
ஜப்பான் நாடும் கைதட்டுது
எங்க ஆளு சூப்பர் ஸ்டாரு

மெரினாவும் எங்க பெருமை
தமிழ் சினிமாவும் எங்க பெருமை
ராஜாவும் ரகுமானும் எங்க பெருமை

சரணம் 2:

ரோட்டுக்கடை கையேந்தி பவனுல
இட்லி வடை
ரேட்டுக்கடை அண்ணாச்சிக் கடையில
பொங்கல் வடை
மேல பாரு மெட்ரோவில் பறக்குது
ஊரு சனம்
கீழ பாரு ஷேர் ஆட்டோ பிதுங்குது
தெனம் தெனம்

ஐஐடியும் டைடல் பார்க்கும்
வளர்க்குது டெக்னாலஜி
ஓ.எம்.ஆரும் ஈ.சி.ஆரும்
வளர்க்குது லவ்வாலஜி

கொள்ள மழைதான் கொட்டி மெரட்ட
வெள்ளக் கடலில் ஊரு மெதக்க
எதுத்து நின்னோம் எழுந்து நின்னோம்
நாங்க சென்னைத் தமிழன்!

 

 

Share.

Comments are closed.