முழு திரில்லர் படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

0

 126 total views,  1 views today

திரில்லர் ஜானர் என்பது சரியான முறையில் உருவாக்கப்படும் போது ரசிகர்களுக்கு ஒரு தலைசிறந்த அனுபவமாக அமையும். அந்த வகையில் ஒரு சிறந்த நடிகரான அருள்நிதி, அவருடைய கதை தேர்வும், கதாபாத்திர தேர்வும் ரசிகர்களாலும், திரைத்துறையிலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருடைய அடுத்த ரிலீஸான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் முழுக்க முழுக்க திரில்லர் படம். பத்திரிக்கையாளர் பின்னணியிலிருந்து வந்திருக்கும் மாறன் இயக்கியிருக்கிறார். ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.
இரவுக்கு ஆயிரம் கண்கள் இயக்குனர் மாறன் படத்தை பற்றி பேசும்போது, “இந்த மொத்த படத்தின் கதையும் இரவில் நடக்குமாறு திரைக்கதை அமைந்திருக்கிறது.  கால் டாக்ஸி டிரைவரான அருள்நிதி ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள, அதை தொடர்ந்து எதிர்பாராத களத்தில் திரைக்கதை பயணிக்கும். அதை தொடர்ந்து நடக்கும் விஷயங்கள், எங்கு போய் முடிகிறது என்பதே திரைக்கதையின் முடிச்சு. படத்தின் ஹைலைட்டே திரைக்கதை தான், சரியான இடங்களில் திருப்பங்கள் அமைந்திருக்கும். ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைக்கும் அனுபவமாக இருக்கும். ரொம்பவே கஷ்டமான ஒரு கதாபாத்திரத்தில் அருள்நிதி சிறப்பாக நடித்திருக்கிறார். அருள்நிதி ஒரு நடிகராக முதிர்ச்சி அடைந்திருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அருள்நிதி மஹிமா காதல் காட்சிகள் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும். நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகுந்த உழைப்பை போட்டு சிறப்பாக இசையமைத்திருக்கிறார் சாம் சிஎஸ். தயாரிப்பாளர் டில்லி பாபுவின் முழு ஆதரவும், அவர் கொடுத்த சுதந்திரமும் தான் இந்த படத்தை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங்  படத்தை யதார்த்தத்துக்கு நெருக்கமாகவும், அடுத்த கட்டத்துக்கும் எடுத்து சென்றுள்ளது. இந்த படம் திரைக்கு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்தை ரசிப்பார்கள்” என்றார்.
Share.

Comments are closed.

CLOSE
CLOSE