மு.ரா.சத்யா எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் “ என்னோடு நீ இருந்தால் “

0

 635 total views,  1 views today

சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.

                                                                                                                                               

ஒளிப்பதிவு           –         நாக.சரவணன்  

இசை                           கே.கே

எடிட்டிங்               –        ராஜ்கீர்த்தி  

கலை                    –        எஸ்.சுப்பிரமணி

நடனம்                           –        கேசவன்  

ஸ்டன்ட்                       ஸ்டன்ட் ஜி

தயாரிப்பு மேற்பார்வை  –        எஸ்.ஆனந்த்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்     – மு.ரா.சத்யா

தயாரிப்பு    –        எஸ்.யசோதா

படத்தின் இயக்குனர் மு.ரா.சத்யாவிடம் படம் பற்றி கேட்ட போது

கிஷோர் ( மு.ரா.சத்யா) ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறான்..

ஒரு பணக்காரபெண்ணான பூஜா(மானஸா நாயர்) வை சந்திக்கிறான்..

அவர்களுக்குள் காதல் மலர்கிறது. திடீரென்று அவள் கானாமல் போகிறாள்..

அவளை பல இடங்களிலும் தேடுகிறான். அப்போது அவனுக்கு திகில் சம்பங்கள் பல  நிகழ்கிறது. அந்த திகில் சம்பவங்களைக் கடந்து பூஜாவை கண்டுபிடித்தானா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.

திகிலுடன் காதலையும் கலந்து சொல்லி இருக்கிறோம். பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.  விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார் மு.ரா.சத்யா

Share.

Comments are closed.