எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும்.
பிரபுசாலமன் , எம்.அன்பழகன் என இரண்டு திறமையானவர்களின் கண்டுபிடிப்பு தான் கிஷோர் ரவிச்சந்திரன். ரூபாய் படம் பார்த்தவர்கள் அத்தனை பேருமே பாராட்டு மழை பொழிந்தது கிஷோரின் நடிப்பைப் பார்த்து தான்.. புதுமுகம் என்கிற எண்ணமே யாருக்குமே தோன்றாத மாதிரி யதார்த்தமான நடிப்பில் அசத்தி விட்டார்.
அவரை சந்தித்து சினிமா பிரவேசம் எப்படி என்று கேட்டோம்..
நான் சென்னையில் படித்து முடித்து விட்டு எம்.பி .ஏ படிப்பிற்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தேன்..
இங்கிருந்து லாரி ஓட்டிக் கொண்டு தேனி சென்றேன்.. தேனி மக்கள் பாஷையை கற்றுக் கொண்டேன். திரும்பி வந்து எங்களது குடும்ப நண்பரான சாட்டை எம்.அன்பழகன் வீட்டுக்கு வந்திருந்தார்.
கிஷோர் , சினிமாவுக்கு ஏற்ற முகம் உனக்கு இருக்கு நடிக்கிறியா என்று கேட்டார்.
தமாஷுக்கு சொல்றார் என்று நினைத்து விட்டு நானும் லண்டன் சென்று எம்.பி ஏ முடித்து விட்டு சென்னை வந்தேன்..
திரும்பவும் வீட்டுக்கு வந்த அவர் என்ன ரெடியா கிஷோர் நடிக்கிறியா என்று கேட்க, நான் சாரி சார் முடியாது என்று சொன்னேன். படிப்பு பிஸினஸ் என்று டென்சனான வாழ்க்கைக்கு நடுவே நடிப்புங்கிற ஒரு ரிலாக்ஸும் தேவை .. நடி என்று வற்புறுத்தினார்.
நானும் அரை மனதோடு சரி என்று சொன்னேன் மறு நாளே பிரபு சாலமன் சார் முன்பு என்னை நிறுத்தினார். என்னை பார்த்தவுடன் ஏம்பா அன்பு இவனை பார்த்தா லண்டன் மாப்பிள்ளை மாதிரி இருக்கான்.. லாரி டிரைவர் காரக்டருக்கு சரிப்படுமான்னு பாத்துக்க என்று சொல்ல உடனே நான் அன்பழகன் சாரிடம் என்ன கதை என்ன காரக்டர் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.
அதற்கு பிறகு தேவி ரிக்ஷா கூத்து பட்டறையில் ஆறு மாதம் பயிற்சி பெற்றேன்.
லாரி டிரைவர் காரக்டர் என்பதால் லாரி ஓட்ட கற்றுக் கொண்டேன்.
லோடு ஏற்றும் காரக்டர் என்பதால் நடு ராத்திரி 1 மணிக்கு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லுங்கியோடு செல்வேன்.அங்கே உள்ளவர்களின் வாழ்க்கையை மனதுக்குள் படம் பிடித்துக் கொண்டேன். சென்னையில் கடுகு எண்ணெய்யை முகம் உடம்பு முழுக்க தேய்த்துக் கொண்டு பீச்சில் வெயிலில் நின்றேன். கறுத்துப் போய் லாரி டிரைவராக போய் பிரபுசாலமன் அன்பழகன் முன்பு நின்றேன்..அசந்து போய் உடனே ஓ.கே சொன்னார்கள். அப்படித்தான் இந்த ரூபாய் படத்தில் நடித்து சினிமா பிரவேசம் ஆனேன்..
“நீ நல்லா நடிச்சிருக்கேன்னு யாராவது பாராட்டினா நீ தோத்து போயிட்டேன்னு அர்த்தம்.. நீ கதாபாத்திரமாவே வாழ்ந்துட்டேன்னு யாராவது பாராட்டினாத் தான் நீ ஜெயிச்சிருக்கேன்னு அர்த்தம்ன்னு பிரபு சாலமன் சார் சொன்னார். அன்பழகன் சார் சொன்னதை அப்படியே நான் செய்தேன்.
அவரை மாதிரி பொறுமைசாலிகளை பார்ப்பது அபூர்வம்.
ரூபாய் படத்தை பார்த்து விட்டு பிரபுசாலமன் காரக்டராவே மாறிட்டே என்று பாராட்டினார்.. எல்லா பத்திரிக்கை மீடியா எல்லாம் எனக்கு நல்ல ஆதரவு கொடுத்திருக்காங்க. அவங்களையும் என்றுமே மறக்க மாட்டேன்.. பிஸினஸ் என்கிற எல்லைகளை மீறி சினிமாங்கிற கோட்டைக்குள்ளே காலை வெச்சுட்டேன் .இனி தொடர வேண்டியது தான்..
அடுத்தும் பிரபு சாலமன் உதவியாளர் ஏழுமலை இயக்கத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறேன்.. இசையமைப்பாளர் சத்யா, யுகபாரதி, தம்பிராமைய்யா, சரண்ராஜ் என்கிற ஜாம்பவான்களும் இதில் இருக்கிறார்கள். எந்த காரக்டராக இருந்தாலும் நடிச்சி என்னை நிருபிக்கணும் ..அது தான் ஆசை.. ரூபாயில் நாலு பில்லர்ல நானும் ஒருத்தன்ங்கிற அங்கீகாரம் கொடுத்த தயாரிப்பாளர் பிரபு சாலமன் இயக்குனர் எம். அன்பழகன் ஆகியோரை நான் மறக்கவே மாட்டேன்…என்றார் கிஷோர் ரவிச்சந்திரன்..
எல்லாம் பேசி முடித்து விட்டு வீட்டை சுற்றிப்பார்க்கும் போது அசந்து போய் விட்டேன்.
வீடு முழுக்க சூப்பர்ஸ்டாருடன் கிஷோரும் அவரது அப்பா ரவிச்சந்திரனும் இருக்கும் புகைப்படங்கள்.. சினிமா பின்புலம் இல்லாத குடும்பம் என்று நினைத்தேன்..சாரி சூப்பர்ஸ்டாருடன் பழக்கமா என்றேன். அப்பா , சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களில் ஒருத்தர்.
நான் மூன்று வயது குழந்தையாக இருக்கும் போதே எனக்கு ஆசி வழங்கியவர். ரூபாய் படப்பிடிப்புக்கு முன்பு அவரிடம் ஆசி பெற்றே கிளம்பினேன். என்றார் கிஷோர் ரவிச்சந்திரன்..
கோடம்பாக்க வானில் இன்னொரு பிரகாச நட்சத்திரம் ஒளி விட ஆரம்பித்து விட்டது.
வாழ்த்துவோம்..வளரட்டும்..