439 total views, 1 views today
SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அனைத்து மொழி ரசிகர்களாலும் கவரப்பட்டு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவருகிறார்.
உலகத்தையே தனது தனித்துவமான நடிப்பால் உற்று நோக்கவைத்த நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு, தனது அடுத்தப் படத்திற்கு ஆயுத்தமாகிவிட்டார்.
2013ம் வருடம் UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் – அனுஷ்கா நடிப்பில் மிர்ச்சி எனும் படம் வெளியாகி வசூல் வேட்டை செய்தது. தற்போது UV கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி, பிரமோத் மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க சூஜித் சைன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றார் நடிகர் பிரபாஸ்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு சங்கர்-இசான்-லாய் இசையமைக்க, மதி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபு சிரில் இப்படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இன்று பூஜையுடன் துவங்கிய #Prabhas19 படத்தை கிருஷ்னம் ராஜு கிளாப் போர்ட் தட்ட, தில் ராஜு கேமராவை ஆன் செய்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில் நடிகர் பிரபாஸ், இயக்குனர் சூஜித் சைன், தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.