Friday, February 7

மெடிக்கல் – கிரைம் – திரில்லர் ‘குற்றம் 23’

Loading

DSC_7024_renamed_8988
அருண் விஜய் – மஹிமா நம்பியார் நடிப்பில், இயக்குநர் அறிவழகன் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் 23’. ‘ரெதான் – தி  சினிமா  பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து, மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில்  உருவாகி இருக்கும்  ‘குற்றம் 23’ திரைப்படத்தை,  வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அன்று  ‘அக்கராஸ் பிலிம்ஸ்’ நிறுவனம் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
“ஒரு தரமான  மெடிக்கல் – கிரைம் – திரில்லர் திரைப்படத்தை நான் உருவாக்கி இருக்கின்றேன் என்று முழுமையாக நம்புகின்றேன். இந்த படத்தில் ஒரு வலுவான கருத்தையும்  நான் உள்ளடக்கி இருக்கின்றேன். ‘என்னை அறிந்தால்’ படத்தில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட அருண் விஜயை , இந்த  ‘குற்றம் 23’ படம் மூலம்  சட்டத்தை பாதுகாக்கும் ஒரு காவல் துறை அதிகாரியாக ரசிகர்கள் காண்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் கன கச்சிதமாக உருவாக, தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகர் அருண் விஜய். முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய், அவருடைய வேடம் மிக சரியாக அமைய பல முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். ஒரு புதிய நட்சத்திர நாயகனின் உதயத்தை, ரசிகர்கள் விரைவில் உறுதி செய்வார்கள்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் அறிவழகன்.⁠⁠⁠⁠