தலைமுறை தலைமுறையாக நடைபெறும் ரசிகர்களின் மோதல்.
ஆம்!
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்கள் “தியாகராஜ பாகவதர் – பி.யூ.சின்னப்பா” இவர்களின் ரசிகர்களிடம் ஏற்பட்ட மோதல்…
“எம்.ஜி.ஆர். – சிவாஜி” , “ரஜினி – கமல்” என்று தொடர்ந்தது.
இன்றைய சூப்பர் ஸ்டார்களாகிய “தல – தளபதி” ரசிர்களின் மோதலை மையக்கருவாக கொண்டு விரைவில் வெளிவரவிருக்கும் படம் “விசிறி”
“J Sa Productions” மூலமாக A.ஜமால் சாகிப்-A.ஜாபர் சாதிக் பெருமையுடன் வழங்க…
நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை கருவாக கொண்டு வெளிவந்த “வெண்நிலா வீடு” திரைப்படத்தின் இயக்குனர் “வெற்றி மகாலிங்கம்” “மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ்” சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் “விசிறி”
படத்தை வெளியிட தயாராக இருக்கும் படக்குழு…
உலகத்தமிழர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் “இளைய தளபதி” விஜய் அவர்களின் “மெர்சல்”படத்தை வரவேற்று ஒரு காணொளியை இன்று வெளியிட்டுள்ளனர்.
“ஒரு படத்த்தினை வரவேற்று இன்னொரு படக்குழு
காணொளி வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்”