டாரேஜமீன்பார்‘, ‘3 இடியாட்ஸ்‘ மற்றும் ‘பிகே‘ போன்றதிரைப்படங்கள்யாவும், மொழிஎன்றஒன்றைதாண்டி, எல்லாதரப்புரசிகர்களின்உள்ளங்களையும்கொள்ளைஅடித்துசென்றது…..அதுமட்டுமன்றி, ஆங்கிலதிரையுலகினரின்கவனத்தையும்அதிகளவில்ஈர்த்தபெருமைஇந்ததிரைப்படங்களுக்குஉண்டு…..இவைஅனைத்திற்கும் ஆணிவேர் – ஒருபெயர் – அமீர்கான். தற்போதுஇவர்தயாரித்து, நடித்துஇருக்கும் ‘யுத்தம்‘ (தங்கல்) திரைப்படம் வருகின்றடிசம்பர் 23 ஆம்தேதிவெளியாவதைஒட்டி, இந்ததிரைப்படத்தைவரவேற்கஒட்டுமொத்தஇந்தியரசிகர்களும் ஆவலோடுகாத்துகொண்டிருக்கின்றனர்….அமீர்கான் – கிரண்ராவ் – சித்தார்த்ராய்கப்பூர்தயாரித்து, UTV மோஷன் பிச்சர்ஸ் வெளியிடும் ‘யுத்தம்‘ (தங்கல்) திரைப்படத்தைஇயக்கிஇருக்கிறார்நிதேஷ்திவாரி. அமீர்கான் – சாக்ஷிதன்வர் – பாத்திமா சனா ஷாயிக் – சான்யாமல்ஹோத்ரா – சாய்ராவசிம் – சுஹானிபட்னாகர்ஆகியோர் முன்னணிகதாபாத்திரங்களில்நடித்திருக்கும் ‘யுத்தம்‘ (தங்கல்) திரைப்படத்தில், தலைச்சிறந்ததொழில்நுட்பகலைஞர்களானஒளிப்பதிவாளர்சேட்டு, இசையமைப்பாளர்பிரீத்தம்மற்றும்படத்தொகுப்பாளர்பல்லுசலுஜாபணியாற்றிஇருப்பதுமேலும்சிறப்பு.
“அன்பிலும், அரவணைப்பிலும்உருவாகிஇருக்கிறது எங்களின் ‘யுத்தம்‘ (தங்கல்) . ஆண் – பெண்இருவருமே சமம்என்பதுதான் ‘யுத்தம்‘ (தங்கல்) படத்தின்கதைகரு. நம்இந்தியநாட்டில்ஏராளமான, திறமைவாய்ந்தவிளையாட்டுவீரர்கள்இருக்கிறார்கள்….அவர்களுக்குஈடுஇணையாக, எந்தவிதத்திலும்குறைவின்றிவிளையாட்டுவீராங்கனைகள்உதயமாக வேண்டும்…..உதயமாவார்கள்…. விளையாட்டுதுறையில் சாதிக்கவேண்டும்என்றஎண்ணத்தை ‘யுத்தம்‘ (தங்கல்) போன்றதிரைப்படங்கள்அவர்களின்உள்ளத்தில்விதைக்கும்….’டாரேஜமீன்பார்‘ – ‘3 இடியாட்ஸ்‘ போன்றதரமானதிரைப்படங்களின்வரிசையில் ‘யுத்தம்‘ (தங்கல்) திரைப்படமும்இடம்பெறும்…..
‘யுத்தம்‘ (தங்கல்) படத்திற்காககடினமாகஉழைத்தஇந்தபெண்களோடுஇணைந்துபணியாற்றியதுஎனக்குபுதுவிதஅனுபவத்தைகொடுத்துஇருக்கிறது…
அவர்களிடம் இருந்து நான் ஏராளமானவற்றைகற்றுகொண்டேன்என்பதுதான்உண்மை. இந்தஇளம்வயதில்இந்தபெண்கள்நடிப்பில்சோபிப்பதைபார்க்கும்போது என்னுடைய 27 வருடஅனுபவம் சிறியதுஆகிவிடுகிறது…..என்னுடையமகள் ‘அய்ரா‘ ஒருகால்பந்துவீராங்கனைஎன்பதைதற்போது நினைக்கும் போதுபெருமையாகஇருக்கின்றது…..என்மகள்என்னைபோலநடிப்பில்ஆர்வம்கொண்டு, திரையுலகில்கால்பதித்தால், நான்மேலும்மகிழ்ச்சிஅடைவேன்….
ஒருதிரைப்படத்தின்கதையைகேட்கும்பொழுதுநான்எப்பவுமே ஒருரசிகனின்கண்ணோட்டத்தில்இருந்துபார்ப்பேன்…. அப்போது தான்அவர்களின்எதிர்பார்ப்புகள்என்ன என்பதைஅறிந்துகொள்ளமுடியும்…..நடிப்பிற்குமொழிஅவசியமில்லை…..எந்தமொழியில்வேண்டுமானாலும்நடிக்கலாம்என்பதுஎன்னுடையஅபிப்ராயம். தமிழில்ரஜினிகாந்த்சாருடனும், தெலுங்கில்சிரஞ்சீவிசாருடனும்நடிக்கஎனக்குஆசைஇருக்கின்றது…..” என்றுகூறினார்அமீர்கான்