சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஆன்மிக பற்றும், ஆன்மிக சுற்றலாவிற்காக இமய மலைக்கு செல்வதும் அனைவரும் அறிந்ததே.
தற்போது, இமய மலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து ஸ்ரீ பாபாஜியை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்க்கும் தியானம் செய்வதற்க்கும் உதவும் வகையில் ஸ்ரீ பாபாஜி தியான மண்டபம் கட்டியுள்ளனர்.
இக்கட்டிடத்தின் கிரஹபிரவேச விழா அடுத்த மாதம் நவம்பர் 10 அன்று நடைபெறவுள்ளது. மேலும் அடுத்த வருடம் இந்த மண்டபத்திற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வருவதாகவுள்ளார்.