ரணம் படத்தில் தாமோதர் என்ற ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் ரஹ்மான்…

0

Loading

          நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ் , மலையாளம் என நல்ல வெற்றியை பெற்றது. தற்போது அவர் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகவுள்ள “ ரணம் “ திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரிதிவிராஜும் , ரஹ்மானும் நடித்துள்ள இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
 
              ரணம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்று யூடியுப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் Trending – ஆனது குறிப்பிடத்தக்கது. ரணம் திரைப்படத்தில் ரஹ்மான் தாமோதர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரணம் திரைப்படத்திலிருந்து ரஹ்மான் நடிப்பில்  “ தாமோதரின் Law of Survival “ என்ற டீசர் தமிழில் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது.
 
             ரஹ்மான் மிகவும் ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் தோன்றி தனது கதாபாத்திரத்தை பற்றி கூறுவது இந்த டீசர் அமைந்துள்ளது.
 
இஷா தல்வார் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை நிர்மல் சஹாதேவ் இயக்கியுள்ளார்.
Share.

Comments are closed.