ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!- இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன். ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்!- இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

0

 799 total views,  1 views today

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.

கீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஊரில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என்று யாருக்கும்மரியாதை கொடுக்காமல் ரவுசு பண்ணுவது தான் சீமத்துரையின் அடையாளம்.

அப்படி ஒரு அசால்ட் அடையாளத்துடன் யார் பேச்சையும் கேட்காமல் ஊருக்குள் சுத்திக் கொண்டிருப்பவனுக்குள் காதல்வந்தால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்கரு.

வாழ்வியலின் அங்கமான காதலையும், அதன் மேல் கொண்ட பாசத்தையும், கர்வத்தால் அழிந்து போகும் மனிதத்தையும்நிறம் மாறாமல் சொல்லும் படம் தான் ‘சீமத்துரை'”, என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.

ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர்எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, ’மேயாதமான்’ படத்தின் ’தங்கச்சி’ பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை, ’பிச்சைக்காரன்’ படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை’மரகத நாணயம்’ படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.

இணை தயாரிப்பு : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம், புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.

நடிகர்கள்நடிகையர்

கதைநாயகன்                 : கீதன்

கதைநாயகி                     : வர்ஷா பொல்லம்மா

மற்ற நடிகர்கள்              : விஜி சந்திரசேகர், ‘கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசிமற்றும் பலர்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

இசை                  : ஜோஸ் ஃப்ராங்க்ளின்

ஒளிப்பதிவு                       : D திருஞான சம்பந்தம்

படத்தொகுப்பு                 : T வீர செந்தில்ராஜ்

பாடல்கள்                          : அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன்

நடனம்                                 : சந்தோஷ் முருகன்

தயாரிப்பு                           : புவன் மீடியா வொர்க்ஸ்., E சுஜய் கிருஷ்ணா

இணை தயாரிப்பு          : ஸ்ரீநந்த் பன்னீர்செல்வம்

கதைதிரைக்கதைவசனம்இயக்கம் : சந்தோஷ் தியாகராஜன்

 

Share.

Comments are closed.