Thursday, March 27

ராகவா லாரன்ஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

Loading

IMG_0431 (1)

பல வெற்றி படங்களை தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் அடுத்து பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு “ மொட்ட சிவா கெட்ட சிவா “ என்று பெயரிட்டுள்ளனர். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 88 வது படம் இது.                                                           படத்தை உலகமுழுவதும் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடுகிறார்.  தமிழகம் முழுவதும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார்.                                       

 

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்கிறார்.  நயாகியாக நிக்கிகல்ராணி நடிக்கிறார். மற்றும் கோவைசரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பிராமய்யா, மனோபாலா, நான்கடவுள் ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வத் தோஸ்ராணா, வம்ஷி கிருஷ்ணா, சரண்தீப் ஆகியோர் வில்லனாக நடித்துள்ளனர்.

மற்றும் ராய்லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.