தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் இயக்குனர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவாலட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர்
இசை – A.K. பிரியன். ( இவர் A.R.ரகுமானின் இசைப்பள்ளி மாணவர் 17 வயது கொண்ட இளைஞர் )
பாடல்கள் – கவிபாஸ்கர் / எடிட்டிங் – எல்.வி.கே.தாஸ்
கலை – மயில்கிருஷ்ணன் / ஸ்டன்ட் – லீ.முருகன்
தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி. ராமகிருஷ்ணன்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட ராசி ஏறக்குறைய இருபது லட்சம் பேர் அதை பார்த்துள்ளனர். அதோடு இல்லாமல் உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆணவக் கொலை பற்றிய பதிவாக இந்த முந்திரிக்காடு இருக்கும். அதை மையப் படுத்தி அந்த போஸ்டர் வடிவமைக்கப் பட்டது.
விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்று இயக்குனர் மு.களஞ்சியம் கூறினார்.