‘ராஜா’விற்கான ‘ரங்குஸ்கி’ மாற்றம்

0

 1,671 total views,  1 views today

‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தரணிதரனும், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷும் தற்போது கைக் கோர்த்து இருக்கும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. மர்மத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படத்தில், ‘இறைவி’ புகழ் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்க இருந்தது. ஆனால் தற்போது ‘வில் அம்பு’ புகழ் சந்தினி தமிழரசன் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
“பூஜா தேவாரியா ஒரு அற்புதமான கலைஞர். ஆனால் எதிர்பாராத  உடல் நல குறைவால், அவருக்கு இப்போது முழவதுமாக ஓய்வு தேவைபடுகின்றது. இரண்டு மாதங்களில் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில்  கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சந்தினி தமிழரசனை மாற்றி இருக்கின்றோம். கடைசி நேரத்தில் எங்கள் படத்தின்  கதாநாயகியாக இணைந்த சந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் இரண்டு மாத காலத்தில் எங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்.” என்று கூறுகிறார் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் இயக்குநர் தரணிதரன்.
 
 
 
 
Share.

Comments are closed.