‘பர்மா’ மற்றும் ‘ஜாக்சன் துரை’ புகழ் தரணிதரன் இயக்கத்தில், ‘மெட்ரோ’ படப்புகழ் ஷிரிஷ் மற்றும் ‘வில் அம்பு’ புகழ் சாந்தினி தமிழரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் திரைப்படம் ‘ராஜா ரங்குஸ்கி’. சக்தி வாசன் மற்றும் ‘பர்மா டாக்கீஸ்’ இணைந்து தயாரித்து வரும் இந்த ”ராஜா ரங்குஸ்கி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. கிரைம் கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக மிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும் மெருகேற்றும் பணிகளில், படக்குழுவினர் விரைவில் ஈடுபட உள்ளனர்.
“என்னுடைய இயக்குநர், தயாரிப்பாளர், ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் முக்கியமாக ராஜா ரங்குஸ்கி படத்திற்கு பக்கபலமாய் இருந்து வரும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளி தெரிவித்து கொள்கின்றேன். ராஜா ரங்குஸ்கி படத்தின் படப்பிடிப்பு எனக்கு ஒரு சிறந்த அனுபவத்தை தந்திருக்கின்றது. நாங்கள் அனைவரும் எங்களின் பணியை சிறப்பாக செய்திருக்கிறோம். என்னுடைய அடுத்த படத்தை பற்றிய தகவல்களை இந்த ஏப்ரல் மாதத்தில் நான் அறிவிப்பேன். மீண்டும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தின் கதாநாயகன் ‘மெட்ரோ’ ஷிரிஷ்.