830 total views, 1 views today
ரிலைன்ஸ் எண்டர்டெயியின்மெண்ட் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தாலா, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம்சூப்பர் போலீஸ் என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் தூபான் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படமே “ சூப்பர் போலீஸ் “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
ராம்சரண் நாயகனாக நடிக்கிறார்.நாயகியாக பிரியங்காசோப்ரா நடிக்கிறார். சஞ்சய்தத் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, ஸ்ரீஹரி, மஹிகில், அதுல்குல்கர்னி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இசை – மீட் பிரதர்ஸ் அஞ்சன் அங்கிட், சிரந்தன் பட், ஆனந்த் ராஜ் ஆனந்த்.
பாடல்கள் – மீனாட்சிசுந்தரம், லோகன் பாரதி, சுவாதி, எழில்வேந்தன், வடிவரசி.
எடிட்டிங் – ஸ்ரீநாத்
தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக்
இயக்கி இருப்பவர் – அபூர்வாலக்கியா.
இணை தயாரிப்பு – சத்யசீத்தாலா, வெங்கட்ராவ்
தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்.
இந்த படத்தின் தமிழாக்கம் செய்பவர் – ARK.ராஜராஜா
படம் பற்றி ராஜராஜவிடம் கேட்ட போது…
காக்கி சட்டைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும்.என்று நினைத்து நேர்மையாக வாழ்பவர் ராம்சரண்.
அதனால் ஐந்தாண்டுகளில் 23 முறை ட்ரான்ஸ்பர் செய்யப் படுகிறார். 22 முறை உலூர்களிலேயே டிரான்ஸ்பர் செயப்பட்ட ராம்சரண் 23 முறையாக மும்பைக்கு மாற்றம் செய்யப் படுகிறார்.
மும்பைக்கு இவர் மாற்றலாகி வந்த உடனேயே கலெக்டர் ஒருவர் கொல்லப் படுகிறார்..பதறிப்போன ரான்சரன் அந்த படுகொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்கிறார். ஆயில் மாபியா தலைவன் பிரகாஷ் ராஜ்தான் காரணம் என்று அறிந்து, அந்த கும்பலின் ஆணிவேரையே பிடுங்கி எரியும் ஆக்ரோஷப் படமே இந்த சூப்பர் போலீஸ்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமே மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் படம் சூப்பர் போலீஸ்.
படத்தில் ஐந்து குத்துப் பாட்டுக்கள் என்பது இன்னொரு ப்ளஸ். படம் இம்மாதம் வெளியாகிறது.