வசூல் ராஜாவாக திகழ்வான் “சீம ராஜா” -ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி

0

 234 total views,  1 views today

 ஒரு கதாபாத்திரத்தின்  தன்மை,குண நலன் , பராக்கிரமம் ஆகியவை அந்த கதாபாத்திரத்தின் ஆடை அமைப்பின் மூலமாக தான் ரசிகர்களுக்கு சென்று அடையும். பல வருடங்களாக பிரபலமான ஆடை வடிவமைப்பாளராக பணி புரியும்  அனு பார்த்தசாரதி கிராமிய படங்களுக்கு ஆடை வடிவமைக்கும் பணி எளிதென கருதப்படும்  கருத்தை நிராகரிக்கிறார். வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றி பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில்.ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்கு தோதாக இருக்க வேண்டும்.பொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கதை உருவாகும் காலக் கட்டத்திலேயே ஆடை  வடிவமைப்பாளரையும் கலந்தாலோசித்து வரும் கலாச்சாரத்தை இயக்குனர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியை சுலபமாக்கியது.  சிவகார்திகேயன் இந்த படத்தில் தனது உற்சாகத்துக்கு தோதான ஆடை  அணிந்து இருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்கு பொருந்தி இருக்கிறது. இயக்குனர் பொன்ராமும் , ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளை தேர்ந்து எடுத்தார்கள். இன்று எல்லோராலும்  பெரிதளவு விவாதிக்க படும் அந்த இளவரசன் தோற்றத்துக்கு மிகவும் உழைத்தோம்.படத்தில்  உள்ள ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு பின்னணியில் படமாக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்றவாறு உடைகள் தேர்ந்து எடுத்து பாடல்களை படமாக்கி உள்ளோம்.குறிப்பாக அவருடைய அறிமுக பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட  மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாக தேர்ந்து எடுக்கப்பட்டவை. குழந்தைகள், இளைஞர்கள் என பலரையும் கவரும் சிவ கார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவருவார். செப்டெம்பர்  13 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று வெளி வர இருக்கும் “சீம ராஜா”  வசூல் ராஜாவாக நிச்சயம் திகழ்வான்” என உறுதியாக கூறுகிறார் அனு பார்த்தசாரதி.
 
 
 
 
 
Share.

Comments are closed.