வஞ்சகர் உலகம் படத்தில் அறிமுகம் அனிஷா அம்ப்ரோஸ்

0

 214 total views,  1 views today

தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்கும் நடிக நடிகையர்க்கு தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்போதுமே உண்டு. மலையாளப்படவுலகின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி மோகன்லால் ஆகியோரில் ஆரம்பித்து, தெலுங்குப் படவுலகின் மகேஷ் பாபு, அல்லூ அர்ஜூன் என்று பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். காரணம் பரவலான புகழும் கவன ஈர்ப்பும் கிடைப்பதுடன், திறமைகளை இரு கரம் நீட்டி வரவேற்கும் கோலிவுட்டின் தனிச் சிறப்புதான்.
கன்னடப்படம் ‘கர்வ்வா’ மற்றும் பன்மொழிப்படமான ‘மனமந்தா’ போன்றவற்றில் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அனிஷா அம்ப்ரோஸ், இப்போது வஞ்சகர் உலகம் படத்தின் மூலம் தமிழ்ப்படவுலகில் அடி எடுத்து வைக்கிறார்.
சமீபத்தில் இவரை சந்தித்தபோது…
வஞ்சகர் உலகம் படத்தில் நடிக்க இயக்குநர் மனோஜ் பீதா ஸ்கைப் மூலம்தான் என்னை அழைத்து படத்தின் கதையைச் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்ததுடன் என் பாத்திரப்படைப்பும் திருப்தியாக அமைந்திருந்தால். படத்தில் நடிக்க உடனே சம்மதம் தெரிவித்தேன்.
பத்திரிகையாளராக நடிக்கும் நான் ஒரு பயங்கரமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறேன் என்பதுதான் கதை. வஞ்சகர் உலகம் திரைக்கதை ஹைப்பர்லிங்க் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இது ஒரே நேரத்தில் நடக்கும் பல்வேறு கதைகளைக் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது என்றார் அனிஷா அம்ப்ரோஸ்.
சிபி புவன சந்திரன், ஹரேஷ் பெரடி, குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், விஷாகன் வணங்கமுடி, ஜான் விஜய் மற்றும் வாசு விக்ரம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சிறப்பான பின்னணி இசையை அமைப்பதில் வல்லவரான சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ரோட்ரிகோ டெல் ரியோ, ஹெர்ரெரா மற்றும் சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ஆன்டனி படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார்..
லாபிரிந்த் பிலிம்ஸ் சார்பில் மஞ்சுளா வஞ்சகர் உலகம் படத்தைத் தயாரி்க்கிறார்.

Share.

Comments are closed.