மூவிங் பிரேம் என்ற பட நிறுவனம் அதிகப் பொருட்செலவில் தயாரிக்க விக்ரம் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப் பட வில்லை. தற்போது விக்ரம் 53 என்றே துவங்கப் பட உள்ளது.
இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி ராதாரவி, ரவிகிஷன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் இன்னும் ஏராளமான நடிகர்கள் நடிக்க உள்ளனர்.
ஒளிப்பதிவு – சுகுமார்
இசை – எஸ்.எஸ்.தமன்
கலை – மாயாபாண்டி
ஸ்டன்ட் – ரவிவர்மன்
எடிட்டிங் – ரூபன்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் விஜய்சந்தர்.
படத்தன் படப்பிடிப்பு பிப்ரவரி 10 ம் தேதி மீனம்பாக்கம் பின்னி மில்லில் துவங்குகிறது. அதற்காக மிகப் பிரமாண்டமாக அரங்கு ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. ஒரே கட்டத்தில் மிகப் பிரமாண்டமாக படம் தயாராகிறது.