விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி

0

Loading

  கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும்  படம் “ ஸ்கெட்ச் “

விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார்.                                                                   மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா,  விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா  ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

இசை   – எஸ்.எஸ்.தமன்

ஒளிப்பதிவு   –  சுகுமார்

பாடல்கள்  –  கபிலன், விவேக், விஜய்சந்தர்

கலை   –  மாயா பாண்டியன்.

எடிட்டிங்   –  ரூபன்

நடனம்   –  பிருந்தா, தஸ்தாகீர்

ஸ்டன்ட்   –  சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்

தயாரிப்பு நிர்வாகம்  –  V.ராமச்சந்திரன்

தயாரிப்பு   –  மூவிங் பிரேம்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் –  விஜய்சந்தர் 

படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு

“ அச்சி புச்சி ஸ்கெட்சு  “ என்ற பாடல் காட்சியில் விக்ரம் பங்கேற்க உடன் 150 டான்சர்ஸ் 1500 மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கேற்க தஸ்தாகீர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.   வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளது. பாடல் வெளியீட்டு விழா  மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

Share.

Comments are closed.