விஜய் ஆண்டனி அருண் விஜய் நடிக்கும் “அக்னி சிறகுகள்”

0

 261 total views,  1 views today

தமிழ் திரை உலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து இருக்கும்  நிறுவனமான அம்மா creations தயாரிக்கும் 23ஆவது திரைப் படத்தை “மூடர் கூடம்” நவீன் இயக்க, விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிக பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் அருண் விஜய். பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு,சென்றாயன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த படத்துக்கு அக்னி சிறகுகள்” என்ற தலைப்பு இடப்பட்டு உள்ளது. 
கே ஏ பாட்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் ஷங்கர் இசை அமைக்க, நவீன் கதை, தவிர திரைக்கதை அமைத்து , வசனம் இயற்றி, இயக்கும் இந்த படம் ஒரு action-த்ரில்லர் படம் என்று கூறுகிறார் இயக்குனர் நவீன். 
 
“அக்னி சிறகுகள்” என்கிற இந்த தலைப்பு எங்களுக்கு கொடுக்கும் உத்வேகம் விவரிக்க முடியாதது.  தலைப்பு தந்த  வீரியம் படம் முழுக்க வெளிப்படும். விஜய் ஆண்டனிக்கென்றே என்று பிரத்தியேகமாக செய்த கதை இல்லை இது. கதை உருவான பிறகுதான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது. அம்மா creations நிறுவனத்துக்கு என்று ஒரு படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனருக்கும் பெருமையே. நட்சத்திர தேர்வு, கதை கள தேர்வு , என எல்லாவற்றிலும் தயாரிப்பாளர் டி சிவா சாருடைய பங்களிப்பு அதிகம். அருண் விஜய் இந்த படத்துக்கு பிறகு  தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார். என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் மீண்டும் இந்த  படத்தில் என்னுடன் இணைகின்றனர்.தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது.பிரத்தியேகமாக சண்டை காட்சிகள் வெளி நாட்டில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்புடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது ” என்றார் இயக்குனர் நவீன்.

 

Share.

Comments are closed.