Monday, February 17

வின்செண்ட் அசோகன் – சோனியா அகர்வால் நடிக்கும் “ எவனவன் “

Loading

 akil and nayana(1)

டிரீம்ஸ் ஆன் பிரேம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு எவனவன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் வின்சென்ட் அசோகன், சோனியா அகர்வால் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். மற்றும் அகில் சந்தோஷ் என்ற புதுமுகத்துடன், முருகாற்றுப்படை சரண், சாக்ஷி சிவா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  அருண் பிரசாத் / இசை  –  பெடோ பீட்                                                         

நடனம்  –  விமல் / பாடல்கள்  –  தென்றல் ராம்குமார்  / எடிட்டிங்  –  ராமாராவ்                   

ஸ்டன்ட்   – குன்றத்தூர் பாபு /  கலை  –  கே.வி.லோகு                                                         

தயாரிப்பு மேற்பார்வை  – சாந்தகுமார்                                                                                 

தயாரிப்பு  –  தங்கமுத்து, பி.கே.சுந்தர்,கருணா, நட்ராஜ்.                                                   

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்  J.நட்டிகுமார். இவர் தந்தை ஜானகிராமன் மோகமுள் உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர்.                    

 நட்டிகுமார் அமெரிக்காவில் சினிமா பற்றி படித்து பட்டம் பெற்றவர், அத்துடன்  சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருது பெற்ற மெய்ப் பொருள் என்ற படத்தையும், பனித்துளி படத்தையும் இயக்கியவர். அவரிடம் படத்தை பற்றி கேட்டோம்..

எதையும்  திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள்..இதை செய்தால் இப்படி செய்தால் பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்தே செய்பவர்கள் பலர்.                                                                        

பின் விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் பலர் அப்படித்தான் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறு அவனை என்ன மாதிரியான சிக்கலில் ஆழ்த்துகிறது. என்பதுதான் கதைக் களம்.

      இதில் வின்சென்ட் அசோகனும், சோனியா அகர்வாலும் போலீஸ் அதிகாரிகளாக நடிக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றம் ஒன்றை விறு விருப்பாக கண்டு பிடிக்கும் அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.

 

மெய்ப்பொருள், பனித்துளி படங்களின் படிப்பிடிப்பு பெரும்பகுதி அமெரிக்காவில் படமாக்கினோம். ஆனால் எவனவன் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஆந்திராவில் நடந்தது பாடல் காட்சிகள் மலேசியாவில் படமானது என்றார் இயக்குனர் நட்டிகுமார்.