வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஷால்

0

 197 total views,  1 views today

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :- இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக  வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன். நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான் அவரிடம் பேசி அவரை ஹீரோ வேடத்தில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வில்லன் வேடம் வலிமையானதாக இருக்கும். விஷால் போன்ற மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ எனும் போது அவருக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் நம்மை போன்ற சாதாரணமான ஒரு கதாபாத்திரமாக இருந்த நாயகனின் கதாபாத்திரத்தை விஷாலுக்காக ‘ மிலிட்டரி மேன் கதாபாத்திரமாக மாற்றினேன். இப்படம் சமூகவலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மருமங்களை பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும். இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றியும் பேசும் படமாக இருக்கும். அதை நான் மிலிட்டரி பேக் டிராபை கொண்டு உருவாக்கியுள்ளேன். படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் அதை பற்றி இப்போது கூற முடியாது. நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாயகியின் காதாபாத்திரம் போல் இல்லாமல் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கேரக்டர் இருக்கும்.
முதலில் விஷால் அவர்கள் மட்டும் படத்தில் பெரிய ஸ்டாராக இருக்கட்டும் மற்றவர்களை எல்லாம் புதியதாக நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் விஷால் சார் தான் படத்தை பெரியதாகவே நாம் பண்ணலாம். நீங்கள் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே படத்துக்கு கொண்டு வாங்க , படம் நல்ல வரணும் அவ்வளவு தான் என்று எனக்கு கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார் விஷால். அவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் சுதந்திரம் மிகப்பெரியது. எனக்கு விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய மல்டி டாஸ்கிங். ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை , தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து , செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளை செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைப்பார் விஷால் சார் என்றார் மித்ரன்.
Share.

Comments are closed.