‘விழித்திரு’ டிரைலர், பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது

0

Loading

IMG_7862
இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் – ‘விழித்திரு’. கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  ‘விழித்திரு’ திரைப்படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். ‘U’ சான்றிதழை பெற்று,  ரசிகர்களிடையே பெரும் எதிரிபார்ப்பை உருவாக்கி வரும் இந்த படத்தின் டிரைலர், வருகின்ற பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று வெளியிடப்படுகிறது.
“இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற ஒரு தரமான திரைப்படம் இந்த விழித்திரு” என்று படத்தை பார்த்த, தமிழ் திரையுலகை சார்ந்த  சில மூத்த கலைஞர்கள் கூறுகையில், எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. நிச்சயமாக இளைஞர்களின் மனதில் ஒரு விதமான விழிப்புணர்ச்சியை எங்களின் விழித்திரு திரைப்படம் விதைக்கும். அதற்கான முதற்கட்ட  சான்று தான் எங்கள்  விழித்திரு  படத்தின் டிரைலர்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

 

Share.

Comments are closed.