‘விவேகம்’ – சர்வதேச தரத்தில் ஒரு தமிழ்ப் படம்

0

Loading

 
ஒரு  சர்வதேச உளவாளி திரைப்படம் உண்மையிலே சர்வதேச தரமாவது அதன் கதையம்சத்தில் மட்டுமல்லாமல் , அதன் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிலும். தான்.’விவேகம்’ போன்ற ஒரு  பிரம்மாண்ட சர்வதேச தர  தமிழ்  படத்திற்கு சரியான தளத்தை அமைப்பதில் கலை இயக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கும். ‘விவேகம்’ படத்தின் கலை இயக்குனர் திரு.மிலன், இப்படத்திற்காக இதுவரை அவர் கையாளாத சில நுணுக்கங்களை கையாண்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்திய சினிமாவின் முதல் உளவு த்ரில்லரான இப்படத்தில் அஜித் குமார், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிப்பில், சிவா இயக்கத்தில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ‘விவேகம்’ குறித்து இப்படத்தின் கலைஇயக்குனர் மிலன் பேசுகையில், ” ‘விவேகம்’ படத்தில் பணிபுரிந்து ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் மிகவும் வித்தியாசமானது. இது ஒரு சர்வேதேச தர படம். இப்படம்  பிரம்மாண்டமாக மட்டும் இல்லாமல் தொழில்நுட்பத்திலும் சர்வதேச தரத்தில் இருக்கும். தமிழ் சினிமா பெருமை படும் படமாக இது இருக்கும். கதைக்கு தேவைப்பட்ட, மனிதர்கள் தடம் பெரிதும் இல்லாத இடங்களை தேடி கண்டுபிடித்து படப்பிடிப்பு நடத்தினோம். உறையும் குளிரில் படப்பிடிப்பு நடத்தும் மிக சவாலான காரியத்தை எங்கள் அணி திறம்பட செய்தது . சில வித்தியாசமான சுவாரஸ்யமான கலை டிசைன்களை இப்படத்தில் பின்பற்றியுள்ளேன். உழைப்பிலும் அர்பணிப்பிலும் எங்கள் எல்லோர்க்கும் அஜித் சார் முன்னோடியாக இருந்தார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. கலை இயக்கத்தில் சில புதிய பாணிகளை ஆராய்ந்து செயல்படுத்த இயக்குனர் சிவா எனக்கு முழு சுதந்திரமும் ஊக்கமும் தந்தார். ‘விவேகம்’ படத்திற்கான அவரது உழைப்பும் பிரம்மாண்ட சிந்தனைகளும் எங்கள் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது. இப்படம் அஜித் சார் ரசிகர்களுக்கும் மற்ற பொது ரசிகர்களுக்கும் “விவேகம்” பெரும் கொண்டாட்டமாக நிச்சயம் இருக்கும்”.
Share.

Comments are closed.