விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தகதிருவிழா 2017

0

 1,031 total views,  2 views today

1 Bharathanatiyam

விவேகானந்த நவராத்திரியின்ஐந்தாம் நாள்கொண்டாட்டங்கள் ஆர்.எம்.கே.விநூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் பஜனையுடன் தொடங்கியது.சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளிலிருந்து சிலபகுதிகளை வாசித்தார் மடத்தின் தன்னார்வ தொண்டர் லோக்குமார்.

மாஸ்டர் ஜே ஜெயந்த் ஒரு அற்புதமான புல்லாங்குழல் கச்சேரி செய்தார். அவர் புல்லாங்குழல் மாலியின் பேரனும் ஆவார். ஒரு வியக்கத்தக்க குழந்தையாக தனது 7ஆம்வயதிலேயேதியாகராஜ உற்சவத்தில் வாசித்துள்ளார். அவர் எம் எஸ் சுப்புலட்சுமிவிருது பெற்றவர். ஆரபி ராகத்தில், ஸ்ரீ தியாராஜ கீர்த்தனை– நாத சுதா ரசத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ‘என்ன தவம் செய்தனை யசதோ’ வாசித்தார். அடுத்த 30 நிமிடங்களுக்கு அரங்கை அருமையான புல்லாங்குழல் இசை நிரப்பியது. “கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்” என்ற பாடலுடன் இன்னிசை நிறைவுற்றது.

சுவாமி பரமசுகாநந்தமகாராஜ் “கட்டறார் கடை தேறினார்” என்ற தலைப்பில் பேசினார். “இந்தியா விழித்தெழு” சுவாமிஜியின் இந்த அறைகூவலுக்குவலுடன்விரிவுரை தொடங்கியது. விவேகானந்த நவராத்திரி ஒரு முக்கியமான நிகழ்வு. “கட்டறார் கடை தேறினார்”, என்ற தலைப்பு பல கேள்விகளுடன் நிரம்பியுள்ளது. இந்தியாவின் ஆன்மீகத்தி மீளுருவாக்கம் செய்ய, ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்தியாவில் பிறந்தார்.

சுவாமி விவேகானந்தர் அவரிடம் இருந்துதான், இந்தியா இழந்த மகிமையை மீண்டு எழுவதற்கான இரகசியத்தி கற்றார். நம் வேதங்கள் மனிதனை“அமிர்தஸ்ய புதிரா’ என்று அழைகிறது. மனிதனின் பெருந்தன்மையை, ஆற்றலை ஸ்ரீ ராமகிருஷ்ணரிடமிருந்து சுவாமிஜி கற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் இந்த கோட்பாட்டை அவரது வாழ்கையின் மூலம் விளக்கியுள்ளார். அவர் சோடசிபூஜா மூலம் தனது மனைவியை வழிப்பட்டார்.

மகாராஜ் சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கையிலிருந்து பல நிகழ்வுகளை சுவாரசியமாக எடுத்து கூறினார். சுவாமிஜி மனிதகுலத்திற்கு சேவை செய்தார் அதையே போதித்தார்.

திருகளியமுர்த்தி, ஐபிஎஸ், ஓய்வு, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். எல்லோருக்கும் விவேகனந்தர் என்ற தலைப்பில் சிறப்பு உரை நிகழ்த்தினார். அவர் சுவாமிகள் ஒரு அற்புதமான சம்பவத்துடேன் தனது உரையை தொடங்கினார், எல்லோரும் முழு நிலவு பாராட்டிய போது, சுவாமிஜி அந்த நிலாவை உருவாக்கிய இறைவனின் அழகை பற்றிகூறினார்.

“நரேனை தனது தாயார் ஒரு விவேகானந்தராக மாற்றினார். அம்மா தலைமுறைகளாக உருவாக்குபவள். அம்மாவை ஆதி சங்கரர் முதல்கண்ணதாசன் வரை அனைத்து பெரியவர்களும் வழிபட்டனர். அவள் சீற் மிகுந்த, கடவுளின் பிரதிநிதி”. அவர் பெரிய பிரமுகர்களின் வாழ்வில் இருந்து பல்வேறு நிகழ்வுகளை சுவாமிஜியின் எண்ணங்களுடன் விளக்க சொன்னார். இவ்வாறு திருகளியமுர்த்தி அன்னையர் பெருந்தன்மையை மேன்மையைதெளிவாக் விளக்கினார். இதேபோல் பல மேற்கோள்கள் மற்றும் உதாரணங்கள் வாயிலாக,குழந்தைகளை வல்லவர்களாக்கும் முறையை பற்றி விளக்கினார். சுருக்கமாக சொன்னால்அவரது உரை தமிழ் மொழி மற்றும்இலக்கி விருந்தாகஅமைந்தது.

தெய்வீக புத்தக கண்காட்சியை600க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பார்வையிட்டனர். மடத்தின் துறவி பெருமக்கள் சுவாமி விவேகானந்தர் சிந்தனைகளை சார்ந்த ஊக்கமூட்டும் விரிவுரைகளைவழங்கினர். மாலை நவராத்திரி நிகழ்வில்300மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

Share.

Comments are closed.