விஷால் மற்றும் தனுஷுடன் மோதும் விவேக்!

0

 118 total views,  1 views today


“வையம் மீடியாஸ்” சார்பில் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கும் திரைப்படம் “எழுமின்”. விவேக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் தேவயானி கதை நாயகியாக நடித்திருக்கிறார். அழகம் பெருமாள் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தற்காப்பு கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்ற 6 சிறுவர்களும் நடித்திருக்கிறார்கள்.

முன்னதாக வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி விடுமுறை தினத்தில் உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நாளில்தான் தனுஷ் நடித்திருக்கும் “வடசென்னை” திரைப்படமும், விஷால் நடித்துள்ள “சண்டக்கோழி2” திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Share.

Comments are closed.

CLOSE
CLOSE