உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறவிஸ்வரூபம் – 2
திரைப்படத்தின் டிரைலர் வரும் ஜூன் 11ம் நாள் மாலை 5மணிக்கு வெளியாகிறது.
இந்தி,தெலுங்கு தமிழ் ஆகிய மும்மொழிகளில் டிரைலர் வெளியாகிறது, தமிழ். இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்ட இந்தப்படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டிருக்கிறது.
சேகர் கபூர்,வகிதா ரகுமான், ராகுல்போஸ், பூஜா குமார்,ஆண்ட்ரியா, ஜல்திப்,நாசர், ஆனந்த மகாதேவன், யூசுப் ஹுசைன் ஆகியோர் நடித்துள்ள இந்த விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.
“விஸ்வரூபம் முதல் பாகத்துக்கு மக்கள்தந்த மகத்தான ஆதரவுதான் எங்களுக்கு இரண்டாம் பாகம் எடுப்பதற்கு உந்து சக்தியாக இருந்தது. இவ்வளவு காலம் பொறுமையுடன் காத்திருந்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.எங்களின் உழைப்பின் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.”என்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.
“உலகநாயகனின் வெற்றித் திரைப்படமான விஸ்வரூபம் 2 வழியாக அவருடன் மீண்டும் இணைந்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.