வீரம் செறிந்தவன் தமிழன் – ராகவா லாரன்ஸ்

0

 492 total views,  1 views today

                         1 (2)

மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும், வீரத்துக்கும் உரியதானது.

சுமார் 5000 ம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் வீர விளையாட்டாக கொண்டாடப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு தடையா ? ஆச்சர்யம் தான். ஆண்டு முழுவதும் தங்களது செல்ல குழந்தைகளாக கருதப்படும் காளைகளை ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாள் தான் விளையாட வைக்கிறார்கள்.

ஆனால் நாள் முழுவதும் எத்தனை லட்சம் உயிர்கள் நம் உணவுக்காகவும், உடைகளுக்காகவும், தோலுக்காகவும் கொல்லப்படுகிறது.

ஜல்லிக்கட்டிற்காக மூன்றே நாட்கள் பயன்படுத்தப் படும் காளைகள் வதை செய்யப் படுகிறது என்றால்.. உணவுக்காகவும், தோலுக்காகவும், உடைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் என்ன தாங்களாகவே தங்கள் தலையை நீட்டி கொல்லப் படுவதை வரவேற்கின்றனவா ?

வீர விளையாட்டுக்கு மிருக வதை என்று பெயராம். வியாபாரத்திற்கு அன்னிய செலாவனி என்று பெயராம். கடந்த சில நாட்களாக சகோதரர், சகோதரிகள் ரோட்டில் நின்று போராடுகிறார்கள் எதற்காக ?

நமக்கு பிடித்த விளையாட்டை விளையாட விடுங்கள் என்று.. அதற்காக அடித்து உதைத்து துன்புறுத்துவதா? மாடுகளை துன்புறுத்துகிறோம் என்று தடை செய்து விட்டு மனிதர்களை அடித்து துரத்தி துன்புறுத்துவது என்ன நியாயம்?

தமிழன் போராடுவது எதற்காக ? தாங்கள் வீரன் என  சொல்லப் படுவதற்காக… ஜல்லிக்கட்டு வேண்டி போராடுபவர்களை முடக்கி கோழைகளாக்க வேண்டாம்.

தயவு செய்து மாநில அரசும், மதிய அரசும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்..

ராகவா லாரன்ஸ் இன்று மெரீனா கடற்கரைக்குச் சென்று போராட்டத்தில் ஈடுப்ட்ட மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததுடன் உடனடியாக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவவும் தெரிவித்தார்.
இயக்கம் என்று ரசிகர் மன்றங்களுக்கு பெயர் வைத்துக்கொண்டு, சில பள்ளி மாணவகர்களுக்கு 40 பக்கம் நோட்டுப்புத்தகங்களையும், சிலருக்கு இரண்டு கிலோ அரிசிப் பையையும் தந்து மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் விளம்பரம் தேடிக்கொள்ளும் நட்சத்திரங்களுக்கு மத்தியில், சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் நடிக்கக் கொடுத்த அட்வான்ஸ் தொகை ஒரு கோடி ரூபாயை அப்படியே ஒரு பத்திரிகை மூலம் மக்கள் நலப் பணிக்குக் கொடுத்த மனிதாபிமானம் மிக்க கலைன் அல்லவா ராகவா லாரன்ஸ்.

 

 

Share.

Comments are closed.

CLOSE
CLOSE