பொய் பேசுபவர்கள் யாரும் பிடித்து பொய் பேசுவதில்லை. அப்படி பொய் பேசுபவர்கள் யாரும் எங்கள் படத்தை பார்த்தால் நிச்சயம் பொய் பேசமாட்டார்கள்.அரசியல்வாதிகள் அதிகமாக பொய் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசகூடாது. இந்த படத்தை பார்த்த பிறகு அவர்கள் எல்லோரும் பொய் சொல்ல தயங்குவார்கள். அந்த அளவுக்கு இந்த படத்தில் புரட்சிகரமான ஒரு கருத்து உள்ளது. இந்த படமே ஒரு புரட்சிகரமான படம்தான். நான் இந்த படத்தில் சேகுவேரா போன்றதொரு புரட்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.சேகுவேரா செஞ்சி அருகே ஒரு கிராமத்தில் பிறந்து மைக் செட்காரனாக இருந்து புரட்சி செய்தால் எப்படி இருக்கும் ?? அது தான் எங்கள் படத்தின் கதை களம்.படத்தில் நான் அரசியல் கூட்டங்களுக்கு மைக் செட் போடுபவனாக வருகிறேன். அரசியல் கட்சி கூட்டங்களுக்கு மைக் செட் போடும் போது சில பிரச்சனைகளை சந்திக்கவேண்டி இருக்கும் , அந்த பிரச்சனைகளின் மூலம் தான் கதை சூடு பிடிக்கும். படத்தில் நாங்கள் பிரதமர் மோடி முதல் , சூப்பர் ஸ்டார் ரஜினி வரை சமகால அரசியல் பற்றி பேசியுள்ளோம். படத்தில் புகை பிடிக்கும் காட்சியோ , மது குடிக்கும் காட்சியோ கிடையாது. இந்த படத்துக்காக நான் 250 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளேன். படத்தை நாங்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் தான் அதிகம் படம்பிடித்துள்ளோம். இப்போது படத்தின் இறுதிகட்ட எடிட்டிங் பனி நடைபெற்றுவருகிறது.
தயாரிப்பு :-
சுதேசிவுட்ஸ் பிலிம்ஸ்