783 total views, 1 views today
அம்மா creations நிறுவனம் சரோஜா படத்துக்கு பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்கும் படம் பார்ட்டி. இன்று இந்தப் படத்தின் பூஜை நடந்தது. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்தராஜ், ரெஜினா கேசந்திரா, சஞ்சிதா ஷெட்டி என ஒரு நட்சத்திர குவியல், பார்ட்டியில் பங்கேற்கிறது. முதல் முறையாக பிரேம்ஜி வெங்கட் பிரபுவின் படத்துக்கு இசை அமைக்கிறார். கே எல் பிரவீன் படத்தொகுப்பு செய்ய , ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
பிஜி தீவுகளில் படமாக்க பட இருக்கும் பார்ட்டி படத்தின் நட்சகத்திர அறிமுகம் மிக பெரிய அளவில் வெங்கட் பிரபுவுக்கே உரிய பாணியில் நடந்தது படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.