வெற்றிக்கொடி நாட்டுவாரா வேதிகா…

0

 191 total views,  1 views today

 

பாலாவின் பரதேசி படத்தில் அங்கம்மா என்ற வேடத்தில் நடித்ததன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த வேதிகா, இயக்குநர் வசந்த பாலனின் காவியத் தலைவன் படத்தல் ஞானகோகிலம் வடிவாம்பாள் என்ற நாடக நடிகை வேடத்தில் முத்திரை பதிக்கும் வகையில் நடித்து பாராட்டுதல்களைப் பெற்றார்.
காசு பணத்தைவிட நடிக்கும் படத்தின் கதையும் தனது கதாபாத்திரமே முக்கியம் என்று கருதும் வேதிகாவுக்கு தமிழில் நல்ல வேடங்கள் சரிவர அமையாததால் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று பிறமொழிகளில் நடிக்க வரும் வரும் நல்ல வாய்ப்புக்களைத் தவற விடாமல் செய்து வந்தார்.
இதன் தொடர்ச்சியாக இப்போது பாலிவுட்டிலும் பாதம் பதிக்கத் தயாராவிட்டார் வேதிகா. பாபநாசம் படமெடு்த்த ஜித்து ஜோஸப் இந்தியில் உருவாக்கும் க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் வேதிகா.
தென்னகத்திலிருந்து மும்பாய்க்கு சென்று இந்தித் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய ஹேமமாலினி, ஸ்ரீதேவியைப்போல் வேதிகாவும் வெற்றி நாயகியாக வலம் வருவாரா…இயக்குநர் ஜித்து ஜோஸப் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது…
“அப்பாவித்தனம் நிறைந்த கல்லூரி மாணவி வேடம், வேதிகாவுக்கு அச்சு அசலாக அப்படியே பொருந்துகிறது. நாடு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டைக்கும்பின் எங்கள் படக்குழுவினரால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்தான் வேதிகா” என்கிறார் ஜித்து ஜோஸப்.
இம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மற்றுமொரு பிரதான வேடத்தை ஏற்றிருப்பவர் ரிஷிகபூர்.
மும்பையில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்புக்குப் பிறகு அடுதத மாதம் மொரிஷியஸில் இந்தப் படத்தின் படப்படிப்பு தொடரவிருக்கிறது.

Share.

Comments are closed.